தமிழில் பேச வெட்கப்படும் தமிழருக்காக
தமிழரிடம் தமிழ்பேச
தயங்கும் தமிழ்நாட்டு
தமிழனே…
விழிகளை விடுத்து
ஓவியம் வாங்கி
என்ன செய்யப்போகிறாய்..?
சிந்திக்கும் ஆற்றலை விடுத்து
வெறும் பேச்சாற்றலால்
என்ன சாதிக்கப்போகிறாய்..?
பெற்ற தாயை பிரிந்தால்
அனாதையாய் திரிவாய் என்பதினை
என்று நீ உணரப்போகிறாய்?
பகலவனை இருளில் அடைத்து
விட்டில் வெளிச்சத்தில் வாழ
ஆசைப்படும் தமிழனே..!
வரலாறுகள் செறிந்த…
இலக்கியங்கள் நிறைந்த…
தனித்தன்மை பொருந்திய…
படிக்க பழக இனிமையான மொழி
செம் மொழிகளில் மூத்த மொழி
உந்தன் தாய்மொழிதான் என்பதினை
ஒருமுறையேனும் உணர்ந்திடு தமிழா..
நேசிக்கத் தொடங்கு
உலகின் முதல் மொழியாம்
உந்தன் தாய் மொழியினை…