நண்பனின் விண்ணப்பம்
"நண்பனின் விண்ணப்பம்..."
தோழியடி நீ எனக்கு-தோன்றும்
இன்பம் நான் உனக்கு...
பாவையடி நீ எனக்கு-பார்க்கும்
விழி நான் உனக்கு...
சோலையடி நீ எனக்கு- சோலைக்
குயில் நான் உனக்கு...
கானமடி நீ எனக்கு-கேட்கும்
கீதமடி நான் உனக்கு...
பூவடி நீ எனக்கு-காக்கும்
காம்படி நான் உனக்கு...
இவையும்,
போதவில்லையடி பெண்ணே...
உன் அன்பிற்கான உணர்வுகளை
பிரதிபலிக்கும் வார்த்தைகளை
"எந்த மொழி வைத்திருக்கக் கூடும்..?"
உன் நேசத்தை உவமிக்க
வார்த்தைகளை எந்த இலக்கியம்
தன்னில் கொண்டிருக்கிறது சொல்..?
சோர்வுத்தகிப்புகளில்
ஆரம்பித்த நாட்களை உற்சாகம்
ததும்ப நீ மாற்றின- மாயத்தை
என் நீல டைரியின் பக்கங்கள் சொல்லுமே...
என் அன்புமிக்க ஸ்நேகிதியே...
சோக உழிகள்-இன்று என்னை
சிதைத்துக் கொண்டிருக்க
தொலைதூரத்தில் நான்,
வேலிக்கு அப்பால் நீ...
பொய்யும் போலியுமே சுலபமாய்
ஜீவிக்க சாத்தியமான- இந்நாட்களில்
உண்மைகளையும் சந்தேகமுட்கள் கிழிக்கின்றன...
என் இனிய ஸ்நேகிதியே...
நிலைமைகள் நாளை மாறலாம்,
என்னை நீ புரிந்து கொள்...
"உனக்கு இன்னும் அன்னியமாகவில்லை நான் என்பதை மட்டும் உணர்ந்து கொள்..."