நட்புக் கவிதை

"நட்புக் கவிதை..."

வளரும் நிலவே உனக்கு
பலகோடி வாழ்த்துக்கள்...

மலரும் நினைவுகள்
மனதில் இனி நிரந்தரம்...

நினைவுகள் வந்தால்
கனத்துப்போகும் இதயம்...

தேர்வுக்காலம் நோக்கி
படையெடுக்க தயாரானோம்./

வெற்றி வாகை சூடிவந்த பின்னே தோற்றுப்போவோம் ஓர் விஷயத்தில்,
அதுதான் "பிரிவு..."

தேர்வுக்கு முன்னே தயாரானோம்
"பிரிவு உபச்சார விழாவிற்கு"

நகைத்துப் பேசிய நாட்கள்
இனி நகர்ந்து மறையும்
"சில நாழிகையில்..."

திகைத்துப்போனோம்,
இப்படியும் ஓர் வாழ்வா என்று?

உங்கள் விழாவில்
முன்னிலை வகிக்க
ஆசனம் அமைக்கிறது
என் கவிதை...

எழுதியவர் : Sureka (31-Jul-10, 3:59 pm)
பார்வை : 6291

மேலே