உறவு....
வார்த்தைகளை
உணர்ச்சிகளாய் வெளிபடுத்தவோ
உள் உணர்வுகளை
வார்த்தைகளாய்
வெளிபடுத்தவோ
காதலில் மட்டுமே முடியும்.
நமக்காக நாம்
வரையறுத்து கொண்ட
நட்பென்ற எல்லையில்
இவை சாத்தியமில்லாமல் போனதில்
வருத்தமே மிச்சம்.
இங்கே எந்த உணர்வுகளும் சரி
எந்த வார்த்தைகளும் சரி
நாகரிகம் கருதி
நமக்கு நாமே புதைத்து கொண்டதை
நம் மனம் மட்டுமே அறியும்.
இருப்பினும்
நீ சொல்ல தயங்கினதை நானும்
நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்
புரிந்துகொண்டமையால் தான்
வளர்ந்து கொண்டு இருக்கிறது
நம் நட்பெனும் உறவு