நீ தோள் சாயும் மாலைப்பொழுது
உன் புன்னகையின் நிழல்
நெஞ்சில் நிழலாடுது
கலைந்தாடும் உன் கூந்தல்
நெஞ்சில் வந்து கவிதை பாடுது
நாம் சந்தித்த நிலவுகள்
நெஞ்சில் வரிசையாக ஊர்வலம் போகுது
நீ தோள் சாயும் மாலைப்பொழுது
இன்றும் காத்திருக்குது
நானும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக ...