அமைதியைத் தேடி…

வஞ்சத்தால் உள்ளத்தை
உருகுலைத்து…

சினத்தினால் சிந்தையை
சிதைத்து…

சுயநலத்தால் இதயத்தை
இருளவைத்து…

மனிதம் செத்த அறையில்
மனதினை சிறைவைத்து…

அமைதி வேண்டுமாம்
தேடி
எங்கெங்கோ செல்கிறார்கள்….

புத்திகெட்ட மனிதனே..!
மனிதாபிமானம் எனும் சாவி
கொண்டு திறந்து விடு
மனதினை…

தூவிடு
நல் எண்ண விதைகளை
சிந்தையில்..

உயிர்பெறட்டும்
உன் இதயம்
அன்பினை சுவாசித்தபடி…

உள்ள அமைதி
உனைத்தேடி வரும்….

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (18-Sep-19, 5:33 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 926

மேலே