எம் அன்னையின் இதயத்தை உடைத்து விடாதீர்கள்

இந்த நாடு ஒரே நாடு
இந்த நாட்டின் மக்களும் ஒரே மக்கள்
பிரிவினை எங்களுக்குள் இல்லை
பிரித்து விடாதீர்கள் எங்களை
மொழியின் பெயரை சொல்லி
மொழி பேசும் மாநிலத்தின் பெயரை சொல்லி
சாதியின் பெயரை சொல்லி
சாதி சார்ந்த இனத்தின் பெயரை சொல்லி
மதத்தின் பெயரை சொல்லி
மதம் சார்ந்த கடவுளின் பெயரை சொல்லி
ஆலயங்களின் பெயரை சொல்லி
ஆன்மீக பிறழல்களின் பெயரை சொல்லி
இந்த நாடு என்றும் ஒரே நாடு தான்
இங்கு வாழும் நாங்கள் எப்போதும் ஒரே மக்கள் தான்
எங்களுக்குள் என்றும் பிரிவினை இல்லை
எங்களை பிரித்து விடாதீர்கள்
அரசியலின் பெயரை சொல்லி
நாங்கள் பிறந்தது இந்த மண்
நாங்கள் வளர்ந்ததும் இந்த மண்
எங்கள் மரணமும் இந்த மண்ணில் தான்
எங்களை தாங்கும் இந்த தேசம்
எங்கள் உயிருக்கும் மேலானதே
இங்கு நிகழும் சிறு சிறு தவறுகளை
பொங்கிப் பூதாகாரமாக்கி
பூக்களின் தேசமான இதை
உடைத்து விடாதீர்கள்
எங்குதான் இல்லை சர்ச்சைகள்
எங்குதான் இல்லை பிணக்குகள்
எங்குதான் இல்லை பூசல்கள்
எங்குதான் இல்லை வறுமை
இதனை உங்கள் ஆயுதமாக்கி
இந்த தேசத்தை உடைத்து விடாதீர்கள்
உங்களுக்கு வோட்டு போட்ட
உங்கள் எஜமானனாக
உத்தரவிடவில்லை
உங்களை ஏற்றிவிட்ட நன்றிக்காக
உங்களிடம் இறைஞ்சி கேட்கிறேன்
அரசியல் வித்தகர்களே அரசியல் செய்ய
அரங்கில் உங்களுக்கு
ஆயிரம் வழிகள் இருக்க எம்
அன்னையின் இதயத்தை உடைத்து விடாதீர்கள்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (18-Sep-19, 12:21 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 187

மேலே