அன்பென்ற வேதம் - தொடர்ச்சி

( " அன்பென்ற வேதம் ",என்ற பெயருக்குக் காரணம், " அன்பே வேதமானால் சிவம் அதற்கு அடங்கிவிடும். ",என்பது தான். அன்பே சிவம் என்பதன் அர்த்தமும் அதுவே. )

அன்றிரவு எல்லா வீட்டுவேலைகளையும் முடித்துவிட்டு இரவு உணவருந்தி விட்டு தன் மொபைலை எடுத்த அன்பரசி தயங்கித் தயங்கி ஒரு வழியாக குறுஞ்சேதியை டைப் செய்து அனுப்பினாள், " Hi! I'm Anbarasi. ",என்று.
அவளது மேசேஜீற்காக காத்திருந்த நல்லதம்பி அப்போது தான் படுத்திருந்தார்.
மொபைலில் மேசேஜ் சத்தம் ஒலிக்கப் போனை எடுத்துப் பார்த்தவர், சந்தோஷப்பட்டார்.
இருப்பினும் அன்பரசியுடன் சற்று கண்ணாமூச்சி விளையாடலாமென, " ok. good night, sweet dreams.", என்று மேசேஜ் பண்ணினார் நல்லதம்பி.

அவர் மேசேஜைப் பார்த்த அன்பரசி, " Enna eduthavudane good night solluringa, pesa virubbam illaya. ok, good night. ",என்று அனுப்பினாள்.

அன்பரசியின் மேசேஜைப் படித்த நல்லதம்பி, " Appadi illa, thookkam varuthu, athan! " , என்று பதிலனுப்பினார்.

அதைப் பார்த்த அன்பரசி, " சரி, தூங்குங்க. Bye. ", என்று பதிலனுப்பிவிட்டு போனை சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டார்.

அன்பரசியின் மேசெஜைப் படித்த நல்லதம்பி, கோபமாகிவிட்டாளோ என்று, " Sorry, summa sonnen. ", என்று மேசேஜ் அனுப்பினார்.

அன்பரசியின் பதிலுக்காகக் காத்திருந்தார்.
ஒரு மணிநேரமாகியும் ரிப்ளை வறல. அதுனால கால் செய்தார். போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
சரி, காலையில் சென்று மன்னிப்புக் கேட்கலாம் என்று எண்ணிக் கொண்டு தூங்கினார்.

மறுநாள் அதிகாலையில் அன்பரசி போனை ஆன் செய்தாள்.
நல்லதம்பியின் மேசேஜ்ஜைப் படித்தார்.
சந்தோஷப்பட்டார்.
இருப்பினும் கோபமாக இருப்பது போல் நடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டார்.

கல்லூரி புறப்பட்டு சென்றார். அங்கு நல்லதம்பி அன்பரசி வருகைக்காகக் காத்திருந்தார்.
அன்பரசி வருவதைக் கண்டார். நேராக அன்பரசியிடம் சென்று பேசினார். அன்பரசி மௌனமாக நடந்து சென்றார்.

சரியென நல்லதம்பி அன்பரசியிடம் சாரி என்றார்.
" உங்கள் சாரி எல்லாம் வேண்டாம். நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க. ", என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

நல்லதம்பி தன் வாழ்வில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்காக வருந்தினார்.
அவர் மனம் அமைதி இல்லாமல் இருந்தது.
இருப்பினும் நல்லதம்பி தனது கடமையில் மூழ்க ஆரம்பித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்லதம்பி அன்பரசியிடம் பேசவில்லை.

அன்பரசி நல்லதம்பியா வந்து பேசுவாரென எதிர்பார்த்தார்.
ஆனால் நல்லதம்பியோ அன்பரசியைக் கண்டுக்கிடவில்லை. அன்பரசி நல்லதம்பியை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தார்.
நல்லதம்பின் செயல்கள் ஒவ்வொன்றையும் அன்பரசி இரசித்தார்.

மூன்றாவது நாள் இரவு படுக்கையில் அன்பரசி நல்லதம்பியிடம் தான் நடந்துகொண்ட விதம் தவறு என்று உணர்ந்தார்.
அதனால், அவருக்கு Message அனுப்பினார், " Sorry, நானும் சும்மாதான் கோபமாக இருக்கமாதிரி நடந்துக் கொண்டேன். Plz, என்கிட்ட பேசுங்க. ",என்று.

அன்பரசியின் message-ஐப் படித்த நல்லதம்பி, " It's ok. had your dinner? ", என்று அனுப்பினார்.
அதைப்படித்த அன்பரசி, " ம்ம். சாப்பிட்டேன். நீங்க? ",என்று பதில் அனுப்பினார்.

அதற்கு நல்லதம்பி, " இப்போது தான் சமையல் பண்றேன். ",என்று அனுப்பினார்.
அதைப் படித்த அன்பரசி," ஏன் நீங்க சமையல் பண்றீங்க? அம்மா என்ன பண்றாங்க? ",என்று அனுப்பினார்.

அதற்கு நல்லதம்பி, " அம்மாவுக்கு வயசாயிற்று. அவங்க ஊருல இருக்காங்க. நான் இப்போ தான் பசங்களுக்கு டியூசன் முடித்து வந்தேன். ",என்று அனுப்பினார்.

அதற்கு அன்பரசி, " சரி என்ன சமையல் இன்னைக்கு? ",என்று கேட்டு அனுப்பினார்.
அதைப் படித்த நல்லதம்பி, "உப்புமா தான். ",என்று அனுப்பினார்.

அதற்கு அன்பரசி, " உப்புமாவா? பசி தாங்காதே! ",என்று அனுப்பினார்.

அதற்கு, " இந்த நேரத்தில் சாதம் வடித்துக் கொண்டிருந்தால் நான் எப்போது தூங்குவது? அதான் உப்புமா செய்றேன். இரவில் எப்போதும் உப்புமா தான். ",என்று நல்லதம்பி பதில் அனுப்பினார்.

அதைப் படித்த அன்பரசி, ", சரி, நீங்க ஒரு மேரேஜ் பண்ணிக்கிட்டா எல்லாம் சரியாகிவிடும். நீங்க ஏன் பண்ணிக்கல? ",என்று கேட்டு அனுப்பினார்.
அதற்கு, " நான் இப்போது தான் ஒரு பெண்ணை பார்த்திருக்கிறேன். அவளை எனக்கு பிடிச்சிருக்கு. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குமா? என்று தெரியவில்லை. ",என்று அனுப்பினார்.

அதைப்படித்த அன்பரசி நல்லதம்பி வேறு பெண்ணைச் சொல்கிறாரோ என்று நினைத்து வருத்தம் கொண்டார்.
அவரை அறியாமலே அவரது கண்கள் கலங்கிவிட்டன.

இருப்பினும் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு, " அந்த பெண்ணிடம் சென்று தங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள். நிச்சயம் ஏற்றுக் கொள்வாள். ",என்று அனுப்பினார்.

அதற்கு, " நன்றி, நாளைக்கு காதலர் தினம் வேற, நாளைக்குக் கண்டிப்பாகச் சொல்றேன். ",என்று அனுப்பினார்.

அதைப் படித்த அன்பரசி, " சரி. அவள் பெயரென்ன? ",என்று கேட்டு அனுப்பினார்.

அதற்கு, நல்லதம்பி, " நாளை காப்பிசாப்பிற்கு வாங்க. அந்த பெண்ணை நேரில் காட்டுகிறேன். ",என்று அனுப்பினார்.
அதற்கு அன்பரசி, "சரி வாறேன். குட்நைட். ", என்று அனுப்பினார்.
அதற்கு, பதிலாக, " Good night. sweet dreams. ", என்று அனுப்பினார் நல்லதம்பி.

அந்த மேசேஜ்ஜைப் படித்த அன்பரசி தன் மனதிற்குள் இனி எங்க Sweet dreams? என்ற விரக்தியோடு படுத்துக் கொண்டார்.

(தொடரும்...)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Sep-19, 11:15 am)
பார்வை : 346

சிறந்த கவிதைகள்

மேலே