உழைப்பு
கோடை வெய்யல் என்று பார்க்காமல்
மண்ணில் வேர்வை சிந்த உழைப்பவன்
விவசாயி அவன் மேனி கருத்திருப்பதும்
இதனால் ….. அவன் உழைப்பில் இதோ
வயலெல்லாம் யானைக்கூட்டம் புகுந்தாலும்
தெரியாமல் வளர்ந்திருக்கும் கரும்பு,
கருத்து பருத்து அறுவடைக்கு தயார்,
உழுதவன் கருப்பு கரும்பும் கருப்பு,
கரும்பின் சாறு தேனமுது , கற்கண்டு
பொங்கலிட வெல்லம் பழனி பஞ்சாம்ருதத்தில்
வெல்லம்……. உழைப்பில் தெரியும் கருப்பு
அதில் உள்ளே இனிப்பு ...கருப்பு அழகே