காதல்,காதல், காதல்
காதல், காதல், காதல் 🌹🌹🌹🌹🌹🌹
காதல் செய்வீர்!!
அனைவரும் நிச்சயம்
காதல் செய்வீர்!!
காதல் வந்தால்
கட்டாயம் காதல் செய்வீர்!!
இனம், மொழி, கலாச்சாரம் கடந்து காதல் செய்வீர்!!
காதலை கடந்து மட்டும்
கண்டிப்பாக செல்லாதீர்.
காதல் மானுடத்தின் உரிமை.
காதல் இறைவன் மனிதனுக்கு அருளிய வரப்பிரசாதம்.
காதல் மானுட உணர்வுகளின் மகோன்னதம்.
காதல் இளமையின்
கொண்டாட்டம்.
சாதியை என்ற சாக்கடை கண்டு அஞ்சாதீர்.
மதம் பேதம் கண்டு கடுகளவும் பயப்படாதீர்.
மனம் என்ற கோயிலை மட்டும் நம்புங்கள்.
காதல் என்ற தெய்வீகம் நிச்சயம் கைக்கூடும்.
தைரியமாக காதலியுங்கள்.
உற்சாகத்தோடு காதலியுங்கள்.
ஒழுக்கத்தோடு காதலியுங்கள்.
உள்ள உறுதியுடன் காதலியுங்கள்.
உண்மையாக காதலியுங்கள்.
தாய் மொழியில் கவிதையை அள்ளி காதலை
அலங்காரம் செய்யுங்கள்.
தமிழராக இருப்பின்
அழகு தமிழ் வார்த்தைகள் பேசி
காதல் மழையில் நினையுங்கள்.
இளமை தமிழில் கொஞ்சி குளாவி
குதுகுலம் அடையுங்கள்.
உயிரே போனாலும் காதலியுங்கள்.
முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள்.
ஆயிரம் கைகள் எதிர்தாலும் இறுதிவரை
போராடி காதலை வெல்லுங்கள்.
எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும்
ஒரு கை பாருங்கள்.
சோதனை பல வந்தாலும் திருமணத்தில் முடித்து
காதலை சாதனையாக்குங்கள்.
சமதர்ம சமூகம் உருவாக ஒரே ஆயுதம்
காதல். காதல். காதல்.
வாழ்க காதல்.
வளர்க காதல்.
🌹🌹🌹🌹🌹
- பாலு.