பஜகோவிந்தம் பக்தி வெண்பா 5 பா 11 12 13

11 .
தனம்தன் மனிதர்உன் யௌவன கர்வம்
எனவாழா தேநொடியில் காலமிவை கொண்டுபோம்
மாயா மயம்வுல கம்விடுத்து சேர்வாய்
பிரமபதம் நீயும் தெளிந்து !

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என பாடிடுவாய் மூடா !
12 .
பகலும் இரவும் இனியகாலை மாலை
பனிவசந் தம்வரும்போம் கால விளையாட்டு
இவ்வுயிர்க் காற்றுபோ னாலும்போ காதேஉன்
இவ்ஆசை என்கிற காற்று !

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என பாடிடுவாய் மூடா !
13 .
யாரடா உன்மனைவி ஏதடா உன்செல்வம்
கூறடாமூ டாவழி காட்டுபவன் இல்லையா
மூவுலகில் சத்சங்கம் தான்பிறவி ஆழி
கடக்க உதவும் படகு !

ஆதலினால் பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என பாடிடுவாய் மூடா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Sep-19, 5:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே