கீழடி ஆய்வு

அவன் அப்போதே எழுத்தறிந்தவன்
ஒரே சீராய் சுட்டமண்ணில்
இன்னும் இருக்கிறது
அந்த முதுகிழவனின் கையொப்பம்...

வெண்நூலெடுத்து ஆடைநெய்யும் நேர்த்தி
அவன் உலகிற்கு கொடுத்த கொடை என்பதற்கு
நூல்கோர்க்க துளையிடப்பட்ட ஆதிகானபறவையின் எழும்பே அதன் சாட்சியம்...

கணிதமும், போர்செய்யும் மதிநுணுக்கமும்
அவன் உள்ளங்கையில் உருண்டோயதற்கு
அங்கு கிடைத்த சதுரங்க கட்டையே பேருண்மை...

எருதோடு விளையாடிஇருக்கிறான்
ஏர்பிடித்து நன்நிலம் செய்து பயிடிட்டுகிறான்,
சேர்த்துவைத்த அவனின் களஞ்சியங்களில்
இப்போதும் மக்காது இருக்கிறது
மனிதகுலத்தின் முதல் நாகரிகம் அகழ்த்து எடுத்த தாழிக்குள்...

நேற்றய அகழ்வில் கிடைத்த உலோகத்தால்
வார்த்தெடுத்த மூக்குத்திக்குள் இப்போதும் கசிந்துகொண்டிக்கிறது
என்முப்பாட்டனின் காதலும் கலையும்...

உலகமனிதமெல்லாம் மழைக்கும் வெயிலுக்கும்
குகைதேடி ஓடி ஓழிந்த
போது
அடுக்கடுக்காய் கல்லும் கைநேர்த்தியும் கொண்டு
கட்டியெழுப்பிய கட்டுமான நுட்பத்தில்
கால்மேல் கால்போட்டு இலக்கியம் செய்துகொண்டிருந்த கிழவனை
ஆரியம் புதைத்துவிட்டுப்போனது...

எஞ்சியிருக்கும் வரலாற்று சுவடில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
கல்தோன்றி மண்தோன்றா காலத்தின் மூத்த குடிகள்...

பெரிதினும் பெரியதாய் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான்
மீண்டும் ஒருமுறை புதையாமல் இருக்க
திராவிடமே நீங்களும் கொஞ்சம் தள்ளியே இருங்கள்...

கீழடி எங்களுக்கானது...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (21-Sep-19, 7:19 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 362

மேலே