செவப்பி அத்தியாயம் 5

செவப்பி அத்தியாயம் 5
======================

நாம ஒன்னு நெனைப்போம்.. கடவுள் ஒன்னு நெனைப்பார். ஆனா, அவர் என்ன நெனைச்சாருங்கிறது அப்ப தெரியாது. அப்புறந்தான் தெரியும்.

செவப்பிகிட்ட அடி வாங்கின பண்ணையாரு ரொம்ப கோவ‌மா இருந்தாரு. நாலஞ்சு நாளா சரியா சாப்பிடாம.. கொள்ளாம.. என்ன.. என்ன.. எப்படி.. எப்படினு யோசிச்சதுல.. அவரோட வலதுகைதன காட்டானப் பத்தி சொன்னான்.

காட்டான், அசலூர்க்காரன்.. ஏற்கனவே ரெண்டு மூணு கேஸ்ல உள்ள போயி, இப்ப ஜாமீன்ல‌ வெளிய வந்து, சுத்திக்கிட்டு இருக்கான். அவன்கிட்ட மட்டும் ஒரு வேலையைக் கொடுத்து, நல்ல அமௌன்ட் தள்ளினோம்னா சரியா செஞ்சிடுவான் அப்படீனு..

அடுத்த நாள் ராத்திரிக்கு, அவங்க ஊருக்குப் போயி, காதும் காதும் வச்சா மாதிரி, விஷயத்தைச் சொல்லி, பேமண்டும் கொடுத்திட்டு வந்தாச்சு..

விடியற்காலையிலேயே கெள‌ம்பிட்டான் காட்டான்.

பொய்கை நதிக்கரையோரம் வந்தவன், இறைக்காக காத்திருக்கிற நரியா வெயிட் பண்ணிட்டு இருந்தான்.

இது எதுவுமே தெரியாத செவப்பி, காலங்காத்தாலேயே எந்திருச்சு எப்பவும் போல ஆத்துக்கு குளிக்க வந்துட்டா..

சாமிப்பாட்டு ஒன்ன பாடிக்கிட்டே ஆத்துக்குள்ள எறங்கி மூழ்கினவதான்...

அவள வெளிய வரவே விடல‌ காட்டான்.. அப்படியே தண்ணியிலேயே அழுத்திப் பிடிச்சுக் கொன்னுட்டான்.

அப்ப அங்க ஒரு ஈ காக்கா கூட இல்லை..

என்ன நடக்குதுனு செவப்பி யோசிக்கக் கூட டைம் தரல..

பார்த்த சாட்சினு யாருமே இல்லாம, செவப்பியோட‌ வாழ்க்கைய முடிச்சிட்டான் காட்டான்.

உடனே அங்கே இருந்தே, ஒரு போன் போட்டான் பண்ணையாருக்கு..

"அய்யா, நீங்க சொன்னபடி முடிச்சிட்டேன்"

இந்த வார்த்தைய கேட்ட பண்ணையாரு ஆடாத‌ குற தான்..

கமுக்கமா வீட்ட‌ விட்டு வெளிய வந்தான்..

"காட்டான், கலக்கிட்ட.. இப்ப ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ.. இந்த விஷயம் பரவ ஆரம்பிக்கறதுக்குள்ள, அந்த இடத்த விட்டு கெளம்பிடு.."

"முடிஞ்சா இன்னும் பத்து பதினைந்து நாளைக்கு உங்க ஊருக்கு கூடப் போகாத. வேற ஏதாவது ஊருக்குப் போயிடு"

"இந்த எல்லா விஷயமும் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ஞ்சு போனப்பறம், நானே உனக்கு ரிங் பண்ணிச் சொல்றேன். அப்ப வந்தாப் போதும். என்ன புரிஞ்சுதா?"

"சரிங்க அய்யா.. ஆனா இன்னிக்கு டக்குனு நான் கெளம்பி வெளியூருக்கெல்லாம் போகல, எல்லாம் சந்தேகப்படுவாங்க.. நாளைக்கு கண்டிப்பா வெளியூர் போயிட்றேன்..", என்று சொல்லி போன் காலை கட் பண்ணிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி, அவனுக்கான முடிவு தேதி குறிக்கப்பட்டு விட்டதைக் கூட அறியாமல், அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றான்.

இதுவரை நடந்த விஷயங்கள் எதுவுமே தெரியாத மாதிரி, எப்பவும் போல சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது பொய்கை நதி..

(பழிவாங்கல் அடுத்து தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (21-Sep-19, 6:08 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 136

மேலே