கிட்டாத காதல்
எம்பி எம்பி எழும் கடல் அலையால்
சந்திரனைத் தொட முடியவில்லை
பாவம் அலைகள் இன்னும் முயற்சியில்
சந்திரன் சிரிக்க......
அதோ போகிறாள் அவள் , அவள் அழகில்
என் மதி மயங்கியது ....
பின் மதி சொன்னது ஏணி போட்டாலும்
எட்டாதடா, அழகைக் கண்டாய் ரசித்தாய்,
அத்தோடு மனதை தேற்றிக்கொள்
அந்த கடல் அலைபோல் இராது...