உன் மெட்டியின் ஓசை என் வீட்டில் 555
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே...
நீ எனக்கு கைகோர்த்து
கன்னத்தில் வைத்த...
முத்தத்தின் சத்தம் என்
உள்ளத்தில் பதிந்திருந்தாலும்...
உன் கணுக்காலில்
உனக்கு நான் சூட்டிய...
வெள்ளி கொலுசின் ஓசைகள்
காதோரம் எப்போதும் ஒலிக்குதடி...
நான் உறங்கினாலும்...
உன் கொலுசின் ஓசை
கேட்கும் போதெல்லாம்...
நீ கொடுத்த முத்தத்தின்
ஓசையும் கேட்குதடி...
நாளை என் வீட்டில்
கேட்கவேண்டுமடி...
உன் மெட்டியின் ஒலி