புத்தி

எதிர்ப்புக்கள் எப்பொழுதும்
எதிர்மறை எண்ணங்களை
எதேச்சையாக எழச்செய்து
எண்ணற்ற இடர்களை
எதிர்பார்க்காமலே உருவாக்கி
ஏதிலிகளாய் எவையுமின்றி
எங்கும் அலைய வைக்கும்
தொல்லைகள் பலவும்
தொடர்ந்திட்டாலும்
சீற்றங்கொண்டு சீறிடாது
ஊரைக் கூட்டி ஊதிவிடாது
பக்குவமாய் பரிகாரம் செய்து
எண் இடம் காலமறிந்து
எதையேனும் எண்ணிச் செய்து
எடுத்த காரியம் ஏதென அறிந்து
எள்ளளவும் சிதறிடாது
கச்சிதமாய் காரியம் செய்வதே
சிந்தை மிகு சீராளர்க்கழகு!
.........
யோகராணி கணேசன்
06.07.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (23-Sep-19, 8:09 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : puthi
பார்வை : 579

மேலே