உன்னை விட உன் புகைப்படம்
உன்னை விட உன் புகைப்படம் தான்
எனக்கு பிடித்திருக்கிறது....
ஏனென்றால் அதுதான்
தொட்டால் சிணுங்குவதில்லை
பார்த்தால் முறைப்பதில்லை
விரல் பட்டால் கை தட்டிவிடுவதில்லை
சொன்னதும்
நெஞ்சில் சாய்ந்து கொள்கிறது
கேட்டதும்
மட்டி சுழிக்கிறது
எப்போது நினைத்தாலும்
கன்னம் தொடுகிறேன்
எப்போது பார்த்தாலும்
என்னை மட்டுமே
பார்க்கிறது
ரசிக்கிறது
சிரிக்கறது
இதுக்காகவே உன் புகைப்படங்களை
பிடித்த அளவுக்கு
உன்னை பிடிப்பதில்லை..
Insta Id - @tashantatanisha