மரம்

உதவாக் கரையாய் அவன்
மரத்தடியில் தன்னைப்போல்
மற்றும் சில உதவாக் கரைகளோடு
நல்ல பொழுதை எல்லாம் வீணாக்கி
படிக்க வேண்டிய வயதில் வீணே
'கோலி' ஆட்டத்தில் .......................
அங்கு வந்த அவன் தாய்
அவனை வெய்தாள் , ' ஏண்டா இப்படி
மரம் மாதிரி நிற்கிறாய்?'
உன் மரபுத்திக்கு நல்லதே ஏறாதா ....?'
அந்த கொடூர வையலில் அவன்
நின்றிருந்த மரம் தன விரிந்த
இலைகள் தாங்கிய கிளைகளால்
நிழல் தருவதை ..... உணர்ந்த அவள்
அவன் தாய், 'மரமே என்னை மன்னித்துவிடு
என் உதவாக்கரை பையனை உன்னோடு ஒப்பிட்டதற்கு..
என்றாள்..... மரபுத்தி என்று நான்
சொன்னதும் தவறே, என்னை மன்னிப்பாயா
மரமே என்றாள் மீண்டும் அவன் தாய்....
நல்ல புத்தி மரத்திற்கு நமக்கு
நன்மையே செய்கிறது .....

இன்னும் மரத்தின் தன்மை தெரியா
மனிதா விழித்துக்கொள் மரத்தைப்போல்
நன்மைகள் செய்ய பழகிக்கொள்ள

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Sep-19, 1:24 pm)
Tanglish : maram
பார்வை : 57

மேலே