அவள் மெட்டி ஒலி

என்னவள் என் அன்பு மனைவி
நடந்துவர அவள் கால் விரலில்
திருமண நாளில் நான் அணிவித்த
மெட்டி , இதோ ஒரு இனிய ஓசை
என் காதில் சேர்க்குதே அந்த
ஓசை சொல்லுது 'மன்னவா
உன் மனைவி நான் என்றும்
உன்னிழலில் வாழ்ந்திட நினைக்கும்
நல்லவள் ஆனால் ஒரு போதும்
உன் அடிமையாய் வாழ்ந்திட எண்ணாதவள்'
இதை ஆம் என்று ஆமோதித்தேன் நானுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Sep-19, 1:55 pm)
பார்வை : 73

மேலே