அழகின் ஆதாரமான அரசிளங்குமரியே
பருத்தி நிறத்து பல்லழகைக் கண்டு
பாசமான என் மனதைப் பறிகொடுத்தேன்
பவழ நிறத்து முகத்தின் அழகால்
பரவச நிலையை அடைந்தேனடி
முகத்தில் தெரியும் பச்சை நரம்பு
மூர்ச்சையாக்கச் செய்யுதடி என்னை முழுவதுமாய்
காய்ச்சி எடுத்த நெய்யில் வாசம் - உன்
மூச்சில் வருகுதடி மான்விழியாளே
கண்ணசைவின் காரணமாய் கருமேகம் கூடுதடி
கானக மயிலெல்லாம் கண்டபடி ஆடுதடி
அந்தி நேரத்து அல்லி மலரும்
அழகு முகம் பார்த்து மெல்லியதாய் மலருதடி
வெண்ணெய் நிறத்து அன்னம் உனைப்பார்த்து
வெட்கி நாணி வேறிடம் ஓடி மறையுதடி
செக்கச் சிவந்த செம்பருத்தி தமக்குள்
செம்மை வாசம் வீச சேவிக்குதடி இயற்கையை
அழகின் ஆதாரமான அரசிளங்குமரியே
அணைத்து உனக்குள் அழுந்தி புதைந்திட
ஆசை என்னக்குள் அடங்காமல் அடுத்தடி
அனுமதி கொடுத்தால் ஆராதிப்பேன் அணுதினமும்
----- நன்னாடன்.