படைப்பு

வெறுமையாய் இருந்த
என்னை உம் ஜீவ
சுவாசத்தால் நிரப்பினீரே...

ஒழுங்கற்று இருந்த
என் வாழ்வை
ஒழுங்காய் மாற்றீனிரே...

இருளில் ஆழ்ந்த
என்னை உம்
வெளிச்சத்தில் நடத்தினீரே...

ஆழ் கடலையும்
ஆகாயத்து பறவையையும்
ஆளச் செய்தீரே...

மண்ணான என்னை
மானுடனாய் உம்
மகிமைக்கே படைத்தீரே...

மண்ணான நான்
மண்ணோடு போகும்
முன்னே உம் மகிமைக்காய் வாழ்வேனே...

மண்ணான மானுடன்
டேவிட் சாமுவேல் ராஜா...

எழுதியவர் : (25-Sep-19, 2:51 pm)
Tanglish : PATAIPU
பார்வை : 67

மேலே