உன் முயற்ச்சியில் நீ முன்னேறு 555

விடியல்...
தினம் தினம் கதிரவன்
எப்போது உதிக்கிறதோ...
அதுதான் விடியல்
எல்லோருக்கும்...
உனக்கு விடியல்
கதிரவனால் அல்ல...
நீ அதிகாலையில்
எப்போது கண்விழிக்கிறாயோ...
அதுதான்
உனக்கு விடியல்...
கதிரவனின் விடியல்
பூமிக்கு
மட்டுமே உனக்கில்லை...
உன் வீட்டு குடத்து நீரிலும்
உன் முகம் பார்க்கலாம்...
நீ அருகில் சென்று
தலைகவிழ்ந்தால்...
நீ தொலைவில்
இருந்து பார்த்தால்...
குடத்தின் உள்ளிருக்கும் நீர்கூட
உன் கண்ணிற்கு தெரியாது...
இன்பமான வாழ்க்கை உன்னைதேடி
எப்போதும் வரப்போவதில்லை...
நீ தேடினால்
மட்டுமே கிடைக்கும்...
நெருப்பு சுடும் என்று
சொல்லி கொடுக்கலாம்...
சூடுபட்டவருக்குத்தான்
வேதனை தெரியும்...
பிறரின் வளர்ச்சியில்
பொறாமை கொள்ளாதே...
நீயும்
முயற்சி செய்தால்...
அந்த கதிரவனுக்கும்
நீ விடியலை கொடுக்கலாம்...
உன் முயற்சியில்
நீ முன்னேறு.....