அவளின் நினைவலை

அவள் கூந்தலினை கடந்திடும் தென்றல்

இது வரமோ என எண்ண துணிந்திடும்
கூரிய கண்களை நெருங்கிடும் கதிரவன்
தினம் மறந்திடும் தனது அஸ்தமனம் !
அவள் இதழினை வருடிய பட்டாம்பூச்சியும்
தேடியே அழைந்திடும் அவளின் வருகையை !
அவள் நினைவால் நிறைந்த என் இதயம்
என்றுமே தேடும் அவளின் காதலை !

எழுதியவர் : கவின்குமார் (27-Sep-19, 7:47 am)
சேர்த்தது : கவின்குமார்
பார்வை : 217

மேலே