சுற்றுலா
சுற்றுலா
இயல்பு வாழ்க்கையிலிருந்து
விலகி
நாம்
செல்லத் தலைப்படும் சுற்றுலா
விளக்கிச் சொல்கிறது
வாழ்வின் இயல்பை...
புரியவைக்கிறது
வாழ்வின்
மேடு பள்ளங்களை..
உணரவைக்கிறது
ஆங்காங்கு
வாழும் மக்களின்
உள்ளங்களை...
இயற்கை வளங்களை
பிரம்மனின் காட்சிகளாய் விரித்துக்காட்டுகிறது!
செயற்கை பிரம்மாண்டங்கள்
முன்னேற்றத்தின் சாட்சியென
எடுத்துக்காட்டுகிறது!
மனமது பரந்து விரிகிறது!
அழுத்தத்திலிருந்து மீள்கிறது! அமைதி மனதை ஆள்கிறது!
பலன்கள் இதுபோல்
பலப்பல உண்டு!
நலன்கள் செய்யும் சுற்றுலா நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டு!