ஏழையின் சிரிப்பு
ஏழையின் சிரிப்பு
உழைப்பு எங்கள் உழைப்பு
உழவு மாட்டையும் மிஞ்சும்!
கற்பிக்க வேண்டி எறும்பும்
வரிசையில் நின்று கெஞ்சும்!
அத்தனை வேர்க்க உழைத்தும்,
தினையின் அளவே மிஞ்சும்!
கள்ளமில்லை கபடமில்லை
வெள்ளை எங்கள் நெஞ்சம்!
பரந்திருக்கும் எங்கள் மனதில்
மறந்தும் இல்லை வஞ்சம்!
வாழ்வோ எங்கள் தாழ்வோ
அன்புக்கு இல்லை பஞ்சம்!
உள்ளத்தின் பாசவெள்ளத்தில்
முள்ளும் எங்கள் மஞ்சம்!
ஏழை எங்கள் சிரிப்பில் தான்
இறைவனும் அடைவான் தஞ்சம்!