துருப்புச்சீட்டு

துருப்புச்சீட்டு

ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண
தேடித்தேடி அலைந்தேன்!

வறுமைப் பிணியால்
சிரிப்பைத் தொலைத்த
ஏழைகள் கண்டு களைத்தேன்!

தேர்தல் சூதுக்களத்தில்
அரசியல்வாதிகள்
அணைப்பில்
ஏழைகள் சிரிக்கக் கண்டு மலைத்தேன்!

பரம ஏழையின் சிரிப்பு
பிரச்சாரத் துருப்புச்சீட்டானது
கண்டு மிரண்டு திகைத்தேன்!

அந்த சிரிப்பில் இறைவனைக் காணாது
நொந்து நானும் சோர்ந்தேன்!

எழுதியவர் : Usharanikannabiran (28-Sep-19, 11:36 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 37

மேலே