முதல் சொல் கவிதை கொ
கொன்றைவேந்தன் ஆத்திசூடி
நன்றாய்ப் பயின்றவன் /
கொடும்பாவி
என்று பெயர் பெற்றான்/
கொடும் கோபம் கொண்டு
கடுஞ்சொல் வீசுகின்றான் /
கொள்ளை அழகுடைய
நல்ல பிள்ளை/
கொள்கை மாறியதாலே
அவனுக்கு அவப்பெயரானது /
கொச்சை வார்த்தைள்
ஏராளம் தாராளம் /
கொட்டுகின்றான்
யார் முகமும் பாராமல் /
கொடுமையிலும் கொடுமை
குலத்துக்கே கேடானப்பிள்ளை /
கொஞ்சம் கொஞ்சமென
நாசமாகிப் போனதே /
கொம்புத் தேவரின் மகனது வாழ்க்கையானது/