ஆசைக் கொண்டேன்
மண் மீது ஆசை கொண்டேன்
மண் நாளை என்னைத் திண்ணும் என மறந்து..
பொன் மீது ஆசை கொண்டேன்
பொன் தீயிட்டால் உருகிக் கரையும் என மறந்து...
பெண் மீது ஆசை கொண்டேன்
பெண் ஒரு நாள் என்னைப் பித்தனாக்கி அலையவிடுவாள் என மறந்து...
வைக்கும் ஆசை எல்லாம்
மாயை என உணர்ந்து
என் மீது ஆசை கொண்டேன்....
தலை முடி வெளுத்து,
உடல் கூனிக்கறுகி ,
கன்னம் குழி விழுந்து ,
இத்தேகம் உறுமாறி போகும் என மறந்து...
உன் உடல் உனக்கல்ல,
நீ இருக்கும் இடம் உனதல்ல ,
உறவென்று நீ எண்ணுதல் உறவல்ல,
உண்மை என எண்ணும்
ஏதும் உண்மையல்ல,
என மனதில் ஏதோ அசரீரி கேட்டு....,
பட்டு,
மட்டு,
தட்டு,
கெட்டு,
இறுதியில்
எல்லாம்வல்ல ஈசன் மேல் ஆசை கொண்டேன்..!!
இதுவே நிஜம் என உணர்ந்து
மன அமைதியில் திளைத்து
ஆனந்தக் கூத்தாடினேன்....!!
என்றும்...என்றென்றும்...
ஜீவன்💞💞