செவப்பி - அத்தியாயம் 7

செவப்பி - அத்தியாயம் 7
=======================

அன்னைக்கு ராத்திரி பண்ணையாரோட‌ காட்டு பங்களாவுல‌ ஒரு பெரிய பார்ட்டியே நடந்துகிட்டு இருந்துச்சு..

ஆட்டம் பாட்டம் மியூசிக்னு தூள் கெளப்புச்சு..

ரொம்ப ஹேப்பியா கைல கிலாஸோட ஆடுக்கிட்டு இருந்தாரு பண்ணையார்..

தன்னோட பெருமைய தன் வாயாலேயே வேற, அடிக்கடி அவரோட கூட்டாளிகளுக்குச் சொல்லிக்கிட்டே இருந்தாரு..

"இந்த‌ ஊரையே எப்படி மயக்கி வைச்சிருந்தா..!! என்னமா பயமுறுத்திக்கிட்டு கெடந்தா..!! வச்சோம்ல‌ ஆப்பு.. இனிமே நம்ம ராஜாங்கம் தான்.. எவன் எவனோ இத்தன நாளா இந்தக் கொண்டாட்டத்துக்காக‌ காத்திக்கிட்டு இருந்தானுக.. என்கிட்டயே இதப்பத்தி எத்தன பேரு பேசியிருக்கானுக.. அவனுககிட்ட இருந்தெல்லாம் இதுக்கு ஷேரா பணத்தை கறக்க‌ வேண்டியது தான்...."

கறியும் ம‌துவுமா களை கட்டியிருந்த பார்ட்டியின் நடுவே, ஒரு சிணுங்கலுடன் ஒலித்தது பண்ணையாரின் செல்போன்..

'நானே.. வருவேன்.. இங்கும் அங்கும்...'

நூறு மடங்கு சப்தமாய்...

'இந்த ரிங்டோன நான் எப்ப‌ வச்சேன்!!?', என யோசித்தவாறே, போனை அட்டென்ட் செய்தவருக்கு ஒரு மிகப்பெரிய ஷாக் கிடைத்தது.

போன் பேசி முடிச்சப்பறமும் அப்படியே ஆடிப்போய் நின்றிருந்தார் பண்ணையார்.

உடம்பெல்லாம் வேர்த்து போயிருச்சு.. ஒரு நடுக்கம் கூட அவருக்கு வந்துருச்சு..

கூட்டாளிகளெல்லாம் கப்சிப்புனு ஆயிட்டாங்க..

"என்ன?.. என்னனு..?", ஒவ்வொருத்தரா கேக்கவும், வேர்த்து விறுவிறுத்து நின்னுக்கிட்டிருந்த பண்ணையார் வாயத் தொறந்தாரு..

"அந்த.. அந்த காட்டான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அவங்க ஊர் கெணத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டானாம்..."

"என்ன..."!!"

அதிர்ச்சி அலைகள் அப்படியே எல்லோருக்கும் பரவியது.

'பார்ட்டி ஓவர்'

"எப்படிடா.. எப்படி? அவன் ரொம்ப தைரியசாலி ஆச்சே..! எதுக்குமே... என்னைக்குமே.. எவனுக்குமே... பயப்படாதவனு தானே கேள்விப்பட்டோம்.."

"மேட்டர முடிச்சுட்டு கூட, ரொம்ப ஹாப்பியாத் தான்டா என்கிட்ட பேசினான்.. நாங்கூட இப்ப‌ ஊருக்குப் போகாத, கெள‌ம்பி எங்கேயாவது வெளியூர் போயிடுனு சொன்னேன். இல்ல இப்ப‌ உடனே கெள‌ம்பினா சந்தேகப் படுவாங்க.. அதனால ஒரு நாள் ஊருல‌ இருந்துட்டு.. நாளைக்கு கண்டிப்பா கெளம்புறேனு சொன்னான்.. இப்படி ஒரேயடியா கெளம்பிடுவானு நெனைக்கலியே...!"

"கண்டிப்பா அவனா இந்த முடிவு எடுக்க வாய்ப்பே இல்லை"

"இதுக்கு பின்னாடி என்னவோ நடந்திருக்கு"

"ஒரு வேள இது தப்புனு அவனுக்கேத் தோணி, இந்த முடிவ எடுத்திருப்பானோ!?"

"அவம் ரொம்ப மோசமானவன்டா.. இது மாதிரி ஒரு விஷயத்துக்கு அப்புறம், அதப்பத்தி யோசிச்சுக்கூட பார்க்க மாட்டான்"

"டே..! நிறுத்துங்கடா.. எல்லாரும் ஒன்னொன்னாப் பேசி குழப்பாதீங்க.. என்னப் பொருத்த வரைக்கும் இது கண்டிப்பாக அவனா செஞ்சிருக்க‌ மாட்டான்", என குறுக்கே புகுந்தார் பண்ணையார்...

"அப்படினா.. எப்படி? எவன்? யாரு?"

"அது..நான் தான்டா.."

பண்ணையாரின் காதுக்குள் கேட்ட அந்தக் குரல் அவரை குலை நடுங்கச் செய்தது.

"...யாரு.. யாரு... யா...யாரு..?"

"நான் தான்டா.."

"செவப்பி"

"அடுத்து"

"நீ தான்"

"ரெடியா இரு"

(நடுக்கம் தொடரும்)

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (30-Sep-19, 11:07 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 100

மேலே