மூச்சடக்கி ஈன்றவளே 555

அம்மா...



ஆசையாய் தூளிகாட்டி

அழகாய் பாட்டிசைத்தவள்...


அழுகின்ற மழலையின்

தேவையை உணர்ந்தவள்...


மறுபிறவி கையில்ஏந்தி
உயிரை
ஈன்றெடுக்கும் சுமைதாங்கி...


அவளின் மடியில் கிடைக்கும்

நிம்மதி வேறெங்குமில்லை...


மழலையின் தோற்றம்

கண்டு வெறுக்காமல்...


அன்பில்

அனைத்துக்கொள்பவள்...


தண்ணீரை அருந்திவிட்டு

நமக்கு பசியாற்றுவாள்...


அவளின்

குருதியை பாலாக்கி...


கருவறையில் இருந்து

வெளியுலகம் நான் காண...


அவள்

கண்டவலிகள்தான் எத்தனை...


பாலில் எதிர்ப்பு

சக்தி கொடுத்தவள்...


உன்னை எப்படி

எதிர்ப்பேன் அம்மா...


மூச்சடக்கி ஈன்றவளை

மூச்சியுள்ளவரை சுமக்க வேண்டும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Sep-19, 6:27 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 578

மேலே