அம்மாவின் பிறந்தநாள்
உனக்காய் மடல் எழுத…
எடுத்தேன் எழுத்தாணியை அந்தியில்…
விழிகளும் பனித்தன…
இதயத்தின் ஓசையில்…
உன் அன்பை…
வரிகளாய் செதுக்க…
வார்த்தைகள் ஏனோ?
இன்னும் மொழியின் கருவறையில்…!
வைகறையும் ஆனது…
ஆனாலும் மடல் மட்டும்…
வெற்றுக் காகிதமாய்…
இறுதியாய் எழுதினேன்…
அன்பு அம்மாவிற்கு…
மகனின் அன்பான…
முத்தங்கள் என்று…!