சின்னதாய் மருந்து
கறிவேப்பிலை கருமையை முடிக்குத் தரும்
கருணைக் கிழங்கு மலச்சிக்கலை களையும்
கற்பூர வாழையுடன் ஏலத்தை கலந்துண்டால்
கடுமையான வயிறு புண் குறையும்
கருஞ்சீரக்கத்துடன் தேன் கலந்து
வெந்நீருடன் புசிப்பின் சிறுநீர் கல் குறையும்
கல்யாண முருங்கை சாறுடன் தேன் கலந்து
காலையில் அருந்தினால் வயிற்றுப் பூச்சி மறையும்
கொத்துமல்லியோடு பெருஞ்சீரகம் ஓமம்
கலந்துண்ண பசி விரைவில் எடுக்கும்.
---- நன்னாடன்.