நன்றி

பட்டத்து இளவரசியாய் என் வீட்டில்
அடுத்து
மகாராணியாக என் வாழ்க்கை என
கற்பனை கோட்டையில் உலா சுயவரம் இல்லை எனினும்
சுயவிவரம் தந்து மணம்பேசி அமைந்த
வாழ்க்கை என்னை பார்த்து சிரித்தது
சமூக அமைப்பு தெரியாது கனவுகாண
சொந்த காலில் நிற்கும் சூழல்
மீண்டும் சமூகப்பாடம் படிக்கவேண்டிய கட்டாயம்
நன்றி சொன்னேன் சமூகத்திற்கு நான்
படித்து தேரிய பிறகு இன்று
உண்மையில் நான் மகாராணி என் ஆளுமை
இந்த சமூகத்திற்கு தேவைப்பட்டதால்