சத்துணவு
பள்ளிப் பருவ
நிகழ்வுகளை ஞாபகமாகச்
சொல்லி நகைக்கின்றது
மனம் இன்னும்/
குறும்புகள் புரிந்து
எறும்புகள் போல்
நகர்ந்த நாட்கள்
நினைவிலே இன்றும் /
சத்துணவுத் திட்டம்
அமுலுக்கு வந்ததும்
விடுமுறை எடுப்பது
தேய்பிறையானது /
விரைந்தது கால்கள்
நித்தமும் பள்ளிக்கூடம்
படிப்புக்காக அல்ல
பசி தீர்ப்பதற்காக /
தேர்வுக்கு நன்றிகள் 😊❤🌹