பன்னி இங்க வாம்மா
பன்னி இங்க வாம்மா.
@@@@@@@
என்னடா மவனே பெத்த பிள்ளைக்கு 'பன்னி'ன்னு பேரு வச்சிருக்க.
@@@@@
ஆத்தா, நான் இப்ப எந்த நாட்டில வேலையில இருக்கிறேன்?
@@@@
என்னமோ அங்கேரி நாடுன்னு சொன்ன.
@@@@@@
கல்யாணம் பண்ணீட்டு அங்க போனவன் அஞ்சு வருசம் கழிச்சு இப்பத்தான் நானும் மலர்கொடியும் எங்க அருமைச் செல்லம் பன்னியும் வந்திருக்கிறோம். எங்களுக்கு அந்த நாட்டிலயே நிரந்தர குடியுரிமை கெடச்சிருக்குது. இன்னும் மூணு நாளுக்கழிச்சு உன்னையும் அங்க அழைச்சிட்டு போறோம். நீ தனியா இங்க கஷ்டப்படவேண்டாம்.
@@@@@
அது சரி. நானும் உங்களப் பிரிஞ்சு தனியா இருக்கப் பிடிக்கல. ஆமாம் எம் பேத்தி பேரு 'பன்னி'.......?
@@@@@@@
ஆத்தா ஹங்கேரிய மொழியில் 'பன்னி' (Panni = favour, grace) பெண் குழந்தைங்களுக்கு வைக்கிற பிரபலமான பேரு. நல்ல அர்த்தமுள்ள பேரு. இங்க தெருவுக்கு ஒரு 'ப்ரியா', 'ஸ்வேதா/ஷ்வேதா' மாதிரி அங்க தெருவுக்கு ஒரு 'பன்னி'
@@@@@@
நல்ல அர்த்தம் இருந்தா சரிடா மவனே. தமிழ்நாடு முழுக்க இந்திப் பேருங்கதான். தமிழ்ப் பேருள்ள பிள்ளைங்களப் பாக்கமுடியலடா மவனே. சரி, என்னோட மருவ பேரு 'புசுப்பலதா'தானே. என்னமோ வேற பேரைச் சொன்னயே.
@@@@@
ஆத்தா 'புஷ்பலதா' (புஷ்பம் = பூ, மலர். லதா = கொடி) ங்கிறது இந்திப் பேரு. அந்தப் பேரை 'மலர்கொடி' ன்னு அழகான தமிழ்ப் பேரா மாத்திட்டேன். வெளிநாடு போனதுக்கப்பறம் தான் நம்ம மொழியோட அருமை தெரியுது.
@@@@@
ஆமாம்டா மவனே. 'புசுப்பலதா'வைவிட 'மலர்கொடி' ங்கிற பேரு நல்லா இருக்குதடா சாமி.