தத்துவ ஒட்டகம்

ஒட்டகத்தில் மேல் அமர்ந்திருந்தவன்
ஒட்டடக்கத்திடம் சொன்னான்
ஒட்டகமே சூடு களைப்பாக இருக்கிறது
ஒரு மரநிழலில் நில்லு இருவரும் இளைப்பாறலாம்
பாலை மணல் வெளியில் மரநிழலா
ஒட்டகம் குலுங்கிக் குழலங்கிச் சிரித்தது !
ரொம்பச் சிரிக்காதே உன் குலுங்கலில்
நான் கீழே விழுந்துவிடுவேன்

ஆமாம் ஒட்டகத்து மேலே உனக்கு முதல் பயணமா ?
ஏதோ பாறை என்று உட்கார்ந்தேன்
திடீரென்று எழுந்தது நடந்தது
நன்றாகத்தானே இருக்கிறது என்று அமர்ந்துவிட்டேன்
நான் கண்டேனா இப்படி பாலை வனத்தின் வழி கொண்டு செல்வாய் என்று
ஒட்டகம் மீண்டும் உரக்கச் சிரித்தது ....
பாலைவனத்தைக் கடக்கத்தானே நாங்கள் பிறவி எடுத்திருக்கிறோம்
வேண்டுமானால் இறங்கி திரும்பிப் போய்க்கொள் என்றது ஒட்டகம் !

ஐயோ திரும்பி அதுவும் நடப்பதா வேண்டவே வேண்டாம் கடைசிவரை
உன் முதுகிலே பயணம் செய்வது என்று முடிவு செய்து விட்டேன் .

நல்ல முடிவு ...பசி தாகமாய் இருந்தால் பையிலிருந்து ஏதாவது எடுத்துச் சாப்பிட்டுக்கொள்
நானும் என் பையிலிருந்து சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றது ஒட்டகம் !

ஒரு வாட்டர் பாட்டில் சிப்ஸ் பாக்கெட் கூட வாங்கி வைத்துக்கொள்ளவில்லையே !
திடீர் பயணம்
ஒட்டகமே உன் பையிலிருந்து எனக்கு கொஞ்சம் கொடேன் உனக்குப் புண்ணியமாகப் போகும்
என்று சொன்னான் சவாரி மனிதன்

ஒட்டகம் சிரிப்பை முயன்று அடக்கிக் கொண்டது. என் பை என் உடம்பிற்குள் இருக்கிறது .
அதிலிருந்து உனக்கு எடுத்துத் தர முடியாது ...உலகம் தெரியாத அறிவில்லாத அப்பாவி மனுஷன்
போலிருக்கு என்று தனக்குள் அலுத்துக் கொண்டது
இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு பாலைவனச் சோலை வரலாம் ...உன் அதிர்ஷ்டம்
பொறுத்துக்க கொள் ....

இப்பவே இந்தச் சூடு சுடுதே இன்னும் உச்சி வெய்யில் கொளுத்தினால் என்ன ஆகுமோ
நான் செத்தேன்
ஒட்டகமே என்னை கொண்டுபோய் சேக்கப் போறீயோ ...என் பொணத்த கொண்டுபோய்ச்
சேர்க்கப் போறீயோ .....யார் காண்டார்கள் ?

நீ இருந்து உன்னை சுமந்து செல்லப் போகிறேனோ அல்லது
நீ இறந்து உன்னைச் சுமந்து செல்லப் போகிறேனோ எனக்குத் தெரியாது
சுமப்பது என் கடமை நடப்பது என்கடமை சுமந்து நடந்து கொண்டுபோய்ச் சேர்ப்பது என் கடமை
Dead or alive ------என்று சொன்னது தத்துவ ஒட்டகம் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-19, 6:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : thathuva ottagam
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே