பார்வைப் பாசறை

எங்கு நோக்கினும் உன் நிழல் தென்படவில்லை என்பதற்காக
சூரியன் என்மீது விழவில்லை என்றாகிவிடுமா!

உன் கண்ணின் மணிகளை
என் பார்வையில் வைத்து இளைப்பாற்றும்போது
எந்த மேகம்தான் நிலவை விட்டு அகல் விரும்பும்!

உன்னைப் போல் எனக்குப் பார்க்கத் தெரியாது
எனினும் உன்னைக் கண்ணில் வைத்து
என்னை எனக்குள் பார்க்க முடிகிறது

எத்தனை முறை நீ என்னைப் பார்க்கிறாயோ..
அத்தனை முறையும்
உன் கண்களை தானமாக பெறுவதாக உணர்கிறேன்

எழுதியவர் : யேசுராஜ் (6-Oct-19, 5:37 pm)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 73

மேலே