பெத்துராஜ்
பையனுக்கு என்ன பெயர்
வைப்பதென்று தெரியவில்லை.
தமிழ்ப் பெயரைச் சூட்டும் காலம்
விண்ணேறி விட்டதால்
பிறமொழிப் பெயர ஒன்றைத்
தேடி அலந்தேன்.
தமிழ் தவிர ஆங்கிம் மட்டுமே
அறிந்தவன் நான்.
பிறதென்னக மொழிகளும்
அறியாத எனக்கு
அண்டை மாநில மொழியான
தெலுங்கு மொழிப் பேயரை
என் மகனுக்குச் சூட்ட எண்ணினேன்.
என் நினைவுக்கு வந்த பெயர்
என் அபிமான நடிகை
‘நிவேதா பெத்துராஜ்’.
ஆஹா ஆனந்தம் பேரானந்தம்
என் செல்லப் பையனுக்கு
நான் வைத்த பெயர்
பெத்துராஜ், பெத்துராஜ்.
பெத்து என்றால் பெரிய
ராஜ் என்றால் அரசன்.
பையனின் பெயருக்கு
அர்த்தம் என்னவேன்று
எவரேனும் கேட்டால்
பெருமையாய்ச் சொல்வேன்
‘பேரரசன்’ என் பையனென்று!