அவள் கண்ணழகு

அவள் சிரிப்பில் புதைந்திருக்கும் அழகை
என் பார்வை தோண்ட தோண்ட
புது புது அழகு தோன்றிட
கவிதையில் இவ்வழகையெல்லாம் சேர்த்து
ஒரு சொல்லில் அடக்கிட முனைந்த நான்
சொல்லிற்கு அலைய . கலைக்களஞ்சியம் தேடி
அலசினேன், சொல்லொன்றும் கண்டேனில்லேன்
கலைக்களஞ்சியமும் கானா பேரழகு
அவள் கண்ணழகு என்ற முடிவில்
நான் சித்திரத்தில் அதற்கு வடிவிவு தர
எத்தனித்தேன் ..... கவிஞன் .... தோற்றான் இங்கு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Oct-19, 11:30 am)
பார்வை : 318

மேலே