தீண்டாமை

தீண்டாமை ஒழிக்கணும் வாடா
மனிதனை மனிதனே நீ ஒதுக்குறியேடா
எல்லோர்க்கும் பசி என்பது ஒன்றுதானே
பழகுவதில் மட்டும் ஏன் தனித்துவம் பார்க்கிறாய்

அம்பேத்கர் சொன்னது அரங்கேற்ற வேணும்
பெரியார் சொன்னது நிஜமாக்க வேணும்
தள்ளி வச்சி தண்ணீர் ஊற்றாதே
தனித்து நின்று தீபம் ஏற்றாதே

பள்ளி கூடத்தில் பிரிவினை பார்க்காதே
படிக்கும் புத்தகத்திற்கு ஜாதிகள் கிடையாதே
ஆடை சுத்தமாக இருந்து என்ன பயன்
ஆளும் சுத்தமாக இருக்க வேண்டும்

சீராய் இருந்த மனித குணம்
இன்று குரங்காய் மாறுவதென்ன
மிருகங்கள் ஜாதி பார்ப்பதில்லை
மனிதர்கள்தான் சிலரை மிருகங்களாய் பார்க்கிறார்கள்

செருப்பு போட்டு நடக்க விடு
சிலர் செருப்பை எடுத்து நடக்க விடாதே
தோளில் துண்டு போட்டு நடக்க விடு
எல்லோர் தோள்களையும் ஒன்று சேர்க்க சொல்லிக்கொடு
வேட்டியை மடித்துக்கட்டி நடக்க விடு
வெண்மை வேட்டியில் இல்லை
உள்ளத்தில் இருக்கு என்பதை நிறுத்தி விடு

BY ABCK

எழுதியவர் : (10-Oct-19, 12:14 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : THEENDAMAI
பார்வை : 41

மேலே