காற்றோடு களியாட்டம்
நீல வானில் அழகு நீரோட்டம்
நெடுநாட்களாய் வெள்ளோட்டம்
காற்றோடு போட்டது களியாட்டம்
காரணமாய் பூவியெங்கும் மழையாட்டம்
முல்லை பூத்தது முத்தாட்டம்
வண்டு போட்டது காதலாட்டம்
வனப்பாய் மாறியது பூந்தோட்டம்
வாசம் வீசியது புயலாட்டம்
இளம் பெண்ணின் கூந்தலாட்டம்
அருகம்புல்லின் வளர் நீட்டம்
அழகான மாந்தோட்டம்
அங்கே அதிகமான கிளிக்கூட்டம்
தினைச் சேர்ந்த தேனாட்டம்
தின்னும் பழச்சுவையோட்டம்
தின்னத் தின்ன நா கேட்கும்
திரவியங்கள் தினம் குறையும்
- - -நன்னாடன்.