நளனின் நகல்
நளனின் நகல்
வேக வைக்கிறான்!
கொதிக்க வைக்கிறான்!
சுட்டு எடுக்கிறான்!
வாட்டி எடுக்கிறான்!
வதக்கி எடுக்கிறான்!
வறுத்து எடுக்கிறான்!
தாளித்து எடுக்கிறான்!
பொறித்து எடுக்கிறான்!
அவிய வைக்கிறான்!
வேக்காடு தருகிறான்!
வத்த வைக்கிறான்!
சுண்ட வைக்கிறான்!
நானிலத்தின் நல்அகலாகி
நன்பகலுக்கு காரணமாகி
மேலும்
நளனுக்கு நகல் போலும்
ஆயினன் போலும்...
அக்னியின் புத்திரன்
உக்கிர
அனலை கக்கும் சூரியன்!
(நளன்_சமையல்கலையில் தேர்ந்தவன்.
நகல்_ ஜெராக்ஸ் காப்பி)