அழகு

அழகு
———
எத்தனை அழகான பூக்களை
எத்தனை விலை கொடுத்து
ஆசையாய் வாங்கினாலும்

என் மகள் எனக்காக
பிஞ்சு விரல்களால்
வரும்வழியில் வழியோரங்களில்

பறித்துக்கொண்டு வரும்
வண்ண மலர்களே
அழகிலும் அழகு!
.......
17.ஆனி.2012

எழுதியவர் : யோகராணி கணேசன் (13-Oct-19, 12:29 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : alagu
பார்வை : 1249

மேலே