கிராமம்+ காதல்

மனசு பனை ஓலை
பின்னுது மாமா...
ஒன் நெனப்புல
உசுரு ரண்டா
உடையுது ஆமா...

மஞ்ச கயிறு
காஞ்சி போச்சு
மாமா.. நிறம்
எடுக்க நிசமா
நீ வரோனும் ஆமா....

தொண்டகுழி வாய்
திறக்கல மாமா...
ஒன் ஒரு பிடிச் சோறு
வந்தாதான் ஆமா...ஒன் வேட்டிய என்னோட
மடிச்சி கிட்டன் மாமா..
நீ இப்ப வந்தா போதும்
ஆமா....

மீன் குழம்பு
வச்சிருக்கன்
மாமா.. அத நீ முழுசா
முழுங்கிடனும் ஆமா...

சிவப்பு சேல
கட்டிருக்கன் மாமா
பொட்டும்,மல்லிகையும்
நீ வச்சிடனும் ஆமா...

காசு இல்லாத உலகம்
நம்ம குடிச மாமா...
சந்தோஷத்துக்கு பஞ்சம்
ஏது ஆமா
******காத்திருக்கன் மாமா
உன்னோட கரைசேற
ஆமா......*******
💢இஷான்💢

எழுதியவர் : இஷான் (13-Oct-19, 12:22 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 164

மேலே