பெண்ணே நீ செய்வது சரி தானா

அலை அலையாய் அவள்
எண்ணங்கள் வந்து என்னை
அலைக்கழிக்க நிலை கொள்ளாமல்
தவித்த நான் கடற்கரை
மணலில் தலை சாய்த்தேன்
அருகே ஓடோடி வந்த கடலலை
என் முகத்திற்கும் நெஞ்சிற்கும்
பன்னீர் ஒத்தடம் செய்தது
ஏன் கவலை கொள்கிறாய்
என் நிலையை எண்ணியாவது
உன்னை நீ தேற்றி கொள்
உனக்கு எங்கே தெரிய போகிறது
என் மன வேதனை
நான் விரகதாபத்தில் வெந்து சாகிறேன்
என் காதலியின் கரத்தையாவது தொட
எத்தனை நாளாய் நான் துடிக்கிறேன் தெரியுமா ?
நான் அவளை இடைவிடாது தொடர்கின்றேன்
அவள் என்னைத் தொடவிடாது நகர்கின்றாள்
அவள் திமிறல் அதனால் தான் எனக்கு
இத்தனை மனக் குமுறல்
என்னை ஆசுவாசப் படுத்திக்க கொண்ட
நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (14-Oct-19, 11:20 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 76

மேலே