மேகமாய் வந்தாயோ
என்
மேனியைத் தழுவிட
மேகமாய் வந்தாயோ?
விழிகளைக் கவர்ந்திட
விண்மீனாய் வந்தாயோ?
தேகம் குளிர்விக்க
தென்றலாய் வந்தாயோ?
மதிமுகம் மலர
கதிரவனாய் வந்தாயோ?
மனம் மகிழ்விக்க
மழையாய் வந்தாயோ?
நினைவுகளை வளமாக்க
நினைவினில் வந்தாயோ?
கனவுகளைத் திருடி
கவிதையில் வந்தாயோ?