இல்வாழ்வின் சிறப்பு

இரு மனத்தால் சங்கமித்து
திருமணத்தால் ஒன்றுபட்டு
இனிதே வாழும் அழகிய வாழ்வில்
அடக்கி ஆளும் அகந்தையை விடுத்து
அடங்கி ஒடுங்கும் அச்சத்தையும் தவிர்த்து
அன்பும் கருணையும் அகத்தில் நிறைத்து,
இறையருளால் இல்லம் செழிக்க
இருவர் மூவராய், மூவர் நால்வராய்
இனிதே தொடர்ந்து
இல்லறம் நல்லறமாய்
இணை பிரியாது இறுதிவரை
போதுமென்ற மனமும்
பொன் கொண்ட குணமுமென
மனநிறைவுடன் வாழ்வதே
இல்வாழ்வின் சிறப்பு!

எழுதியவர் : உமா (15-Oct-19, 10:07 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 218

மேலே