அம்மா, நான் எந்த பிரிவு
அம்மா,நான் எந்த பிரிவு?
உன் ஒரு நிமிட திருட்டு சுகத்துக்காக என்னை உன் வயிற்றில் சுமந்தாய், சில நிமிடங்களுக்கு முன் பிறந்த என்னை இப்படி ஈவு, இரக்கம் இல்லாமல் குப்பை தொட்டியில் வீசி விட்டு செல்கிறாயே
நியாயமா?
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில்
ஆயிரம் வழி இருக்கே உன் வயிற்றில் இருந்த என்னை அழிக்க
ஒரு உயிர் உனக்கு அவ்வளவு எளிதாகிவிட்டது
இன்னும் சில நிமிடங்களில் குப்பை லாரி வரும்
குப்பையோடு நானும் ஒரு குப்பையாக
என்னை அள்ளி கொண்டு போகும்
அம்மா, அம்மா.... (அப்படி நான் கூப்பிடுவதால் உனக்கு ஒன்றும் ஆட்சேபனை ஏதும் இல்லையே)
சரி குப்பையில்
நான் எந்த பிரிவு
மக்கும் குப்பையா?
மக்காத குப்பையா?
- பாலு