திடீரென ஒரு நாள் தெய்வம் மனிதர்களை பார்த்து …

திடீரென ஒரு நாள் தெய்வம் மனிதர்களை பார்த்து …

என் பெயரால் பிரிவினை வளர்த்து
சமுதாயத்தை உதிரம் சொட்ட செய்தாய் ஏன்?

என் பெயரால் பணத்தை திருட
வலியோரையும் மூடனாக்கினாய் ஏன்?

என் பெயரால் பெண்மையை ஓடிக்கி
வீட்டிலேயே ஓரமாய் வாழ வைக்கிறாய் ஏன்?

என் பெயரால் மனிதத்தை சிதற செய்து
ஒவ்வொரு நாளும் அழிக்கிறாய் ஏன்?

நானா கேட்டேன் சாதிய சித்தாந்தங்களை
நானா கேட்டேன் தங்கத்தையும் வைரத்தையும்
நானா கேட்டேன் பெண் அடிமைத்தனத்தை
நானா கேட்டேன் சிசுவின் கீச்சலையும், உயிர்களின் உதிரத்தையும்.

இன்னொரு முறை கேட்கிறேன்
இவையெல்லாம் நானா கேட்டேன்............

எழுதியவர் : கண்மணி (16-Oct-19, 5:24 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 1682

மேலே