ஊர் விழித்து விட்டது
ஊர் விழித்து விட்டது
வானம் இருளை தோய்த்து
வெளுப்பாக்கியதும்
கருமையின் கறைகள்
அகன்ற மகிழ்ச்சியில்
தனக்கும் விடுதலை கிடைக்கும்
நம்பிக்கையில் கறிக்கடை
கூண்டுக்குள் இருந்து
கூவி அழைத்த சேவல்
சட சட வென
சோம்பலை முறித்து
கண் விழித்தது ஊர்.
எங்கும் தொற்றும் பரபரப்பு
பள்ளிக்கு கிளம்ப
பிள்ளைகளை தூண்டும் தாய்மார்கள்
வீடு வீடாய் பாலை
ஊற்றி செல்லும் பால்காரர்
சைக்கிளில் அமர்ந்து
விசிறி செல்லும்
பத்திரிக்கை பையன்
இன்றைய விடியல் நன்மை
தருமா? ஏக்கத்தில் கிளம்பும்
எண்ணற்ற முகங்கள்
வேலை வேண்டி
வேட்டைக்கு செல்லும்
இளைஞர் இளைஞிகள் !
சூரியன் கூட தன்னை
எழுப்பி மேலே சென்று
தலை உச்சியில்
சூட்டை ஏற்ற !
ஓ…இந்த நாள் இனிமையாய்
கழிய…